லின் யே
Appearance
லின் யே Lin Ye | |
---|---|
நாடு | சீனா |
பிறப்பு | 1974 |
பட்டம் | பெண் பிடே மாசுட்டர் |
லின் யே (Lin Ye ) 1974 ஆம் ஆண்டு சீனாவில் பிறந்த ஒரு சதுரங்க பெண் பிடே மாசுட்டர் மற்றும் சதுரங்க நடுவர் ஆவார். 1995 ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டிலுள்ள கிசினோவில் நடைபெற்ற மகளிர் உலக சதுரங்க மண்டலங்களுக்கு இடையிலான போட்டியில் லின் யே பங்கேற்று 40 ஆவது இடத்தைப் பிடித்தார் [1].. லின் யே ஒரு முக்கியமான முன்னணி சதுரங்க போட்டி நடுவராக திகழ்ந்தார். 2008 ஆம் ஆண்டில், அவர் ஒரு பிடே அமைப்பின் நடுவர் ஆனார், 2011 இல் அவர் அனைத்துலக நடுவர் தகுதிப் பட்டத்தைப் பெற்றார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு சதுரங்க போட்டியின் நடுவராகவும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால அனைத்துலக பல்கலைக்கழக விளையாட்டுக் கூட்டமைப்பு போட்டிகளின் சதுரங்க போட்டி நடுவராகவும் செயல்பட்டார் [2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1995 Kishinev Interzonal Tournament : World Chess Championship (women)". www.mark-weeks.com.
- ↑ "FIDE Title Applications (GM, IM, WGM, WIM, IA, FA, IO)". ratings.fide.com.
புற இணைப்புகள்
[தொகு]- Lin Ye chess games at 365Chess.com